மூச்சுத் திணறல் காரணமாக மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

கொச்சி: கடுமையான காய்ச்சல், மூச்சுத் திணறல் காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் ஐந்து நாட்கள் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் மோகன்லால் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம், “64 வயதாகும் மோகன்லாலுக்கு, கடுமையான காய்ச்சல், முச்சுத் திணறல் மற்றும் தசை வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு சுவாச தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஐந்து நாட்கள் ஓய்வுடன் சிகிச்சை மேற்கொள்ளவும், பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

மோகன்லால் விரைந்து குணமடைய சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது மோகன்லால் ’லூசிபர் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். முன்னதாக தான் இயக்கி நடித்துள்ள ‘பர்ரோஸ்’ படத்தின் இறுதிகட்ட பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் குஜராத்திலிருந்து திரும்பிய அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்