தங்கள் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதாக சுசீந்திரன் என்ற நடிகர் மீது தயாரிப்பாளர் முக்தா பிலிம்ஸ் முக்தா ரவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, கூறியதாவது: எங்களுடைய முக்தா பிலிம்ஸ் நிறுவனம் 1960-ம் ஆண்டு தொடங்கியது. சிவாஜி, ரஜினி, கமல், ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களை வைத்து 40-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளோம். இப்போது இந்த நிறுவனத்தை நான் நிர்வகித்து வருகிறேன். தற்போது எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. சொந்தமாக ஓடிடி தளம் தொடங்கும் முயற்சியில் இருக்கிறோம். இந்நிலையில் சுசீந்திரன் என்ற நடிகர், முக்தா
பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்றும் புதிதாகப் படம் தயாரிக்கிறோம் என்றும் கூறி, நடிகைகள் தேவை என்று பெண்களைத் தொடர்பு கொண்டு பேசி வருவதாக அறிந்தோம். இதுகுறித்து சென்னை காவல்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறோம். அவரை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்.
இதுவரை நாங்கள் தயாரித்த படங்களில் சம்பந்தப்பட்ட சங்கங் களில் உறுப்பினராக இருப்பவர்களை மட்டுமே பணியாற்ற அனுமதித்துள்ளோம். இவ்வாறு முக்தா ரவி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago