மதுவுக்கு எதிராக உருவான சாலா

By செய்திப்பிரிவு

அறிமுக இயக்குநர் எஸ்.டி.மணிபால் இயக்கியுள்ள படம், ‘சாலா'. இதில், தீரன்,ஸ்ரீ நாத், ரேஷ்மா வெங்கடேஷ், அருள்தாஸ், சம்பத்ராம், 'மெட்ராஸ்' வினோத் என பலர் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா ஃபேக்டரி சார்பில் டி.ஜி.விஷ்வபிரசாத் தயாரிக்கிறார். விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பு செய்கிறார். ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்துள்ளார். தீசன் இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இதன் டீசரை அல்லு அர்ஜுன் வெளியிட்டிருந்தார்.

படம்பற்றி ஹீரோவாக நடித்துள்ள தீரன் கூறியதாவது: வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்துக்காக இரண்டு குழுக்கள் மோதிக் கொள்கிறார்கள். அந்தக் கூடத்தை இழுத்து மூட நினைக்கிறார் ஒரு பெண். இவர்களுக்குள் நடக்கும் மோதல்தான் படம். கமர்ஷியல் ஆக்‌ஷன் கதை என்றாலும் நல்ல மெசேஜ் இருக்கும். குடியால் நடக்கும் பாதிப்புகளை, பிரச்சினைகளை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தப் படம் பார்த்தால், மதுகுடிப்பவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றுவார்கள் என்று நம்புகிறோம். படத்தைப் பார்த்து இரண்டு பேராவது திருந்தினால் மகிழ்ச்சிதான். மதுக்கடையை மூட நினைக்கும் பெண் கதாபாத்திரத்துக்கு மதுரையைச் சேர்ந்த நந்தினிதான் இன்ஸ்பிரேஷன். ‘சாலா' என்றால் சாலமன் என்பதின் சுருக்கம். வரும் 23-ம் தேதி படம் வெளியாகிறது. இவ்வாறு தீரன் கூறினர். இயக்குநர் எஸ்.டி.மணிபால் உடன் இருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE