சீரியஸான கேரக்டர்கள்.. கவனம் ஈர்க்கும் எடிட்டிங்: சூரியின் ‘கொட்டுக்காளி’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: சூரி, அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற படம் ‘கூழாங்கல்’. 94-வது ஆஸ்கர் விருதுக்கும் இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் படத்தின் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

சூரி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகை அன்னாபென் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மூட நம்பிக்கை, ஆணாதிக்கம் மற்றும் சிக்கலான மனித உணர்வுகள் குறித்து இப்படம் பேசும் என இயக்குநர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?: சூரி, அன்னா பென் என ட்ரெய்லரில் தோன்றும் அத்தனை கேரக்டர்களும் சீரியாஸாக ஆரம்பம் முதல் இறுதிவரை உள்ளனர். ட்ரெய்லரில் ஒரே ஒருமுறை மட்டுமே வசனம் இடம்பெறுகிறது. மற்றபடி, காட்சியமைப்புகள் மட்டுமே பேசுகிறது. எனினும், அந்த காட்சியமைப்புகளும், ட்ரெய்லரின் எடிட்டிங்கும் கவனம் ஈர்க்க வைக்கிறது. குறிப்பாக, சேவலின் ஓசையுடன் பின்னணி இசையும் சேர்ந்து செய்யப்பட்டுள்ள எடிட்டிங் ட்ரெய்லரை மேலும் பார்க்க தூண்டுகிறது. சீரியாஸான, அதேநேரம் இன்டென்ஸான படம் கொட்டுக்காளி என்பதை ட்ரெய்லர் நமக்கு புரியவைக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்