சென்னை: சூரி, அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ படத்தின் ட்ரெய்லர் செவ்வாய்கிழமை (ஆக.13) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற படம் ‘கூழாங்கல்’. 94-வது ஆஸ்கர் விருதுக்கும் இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் படத்தின் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
சூரி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகை அன்னாபென் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மூட நம்பிக்கை, ஆணாதிக்கம் மற்றும் சிக்கலான மனித உணர்வுகள் குறித்து இப்படம் பேசும் என இயக்குநர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
» ‘தங்கலான்’ ரிலீஸுக்கு ரூ.1 கோடி டெபாசிட்: தயாரிப்பாளருக்கு ஐகோர்ட் உத்தரவு
» பிரம்மாண்ட காட்சிகள், கூர்மையான வசனங்கள்: சூர்யாவின் ‘கங்குவா’ ட்ரெய்லர் எப்படி?
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago