ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியாகி, உலகமெங்கும் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை இந்தப் படம் பெற்றிருக்கிறது. இதன் அடுத்த பாகமான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.
இதன் 3-ம் பாகம், 2025-ம் ஆண்டு டிச.19-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் தலைப்பை, இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் நடிகர்கள் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். படத்துக்கு ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ (Avatar: Fire and Ash) என்று தலைப்பு வைத்துள்ளனர். “இதுவரை பார்த்திராத பல பண்டோராவை இதில் பார்ப்பீர்கள். தீவிரமான சாகசத்தையும் முந்தைய பாகத்தை விட அதிகமான உணர்ச்சி வெளிப்பாடுகளையும் இதில் பார்க்க முடியும். விஷுவலாகவும் சிறந்த அனுபவத்தைத் தரும்” என்று கேமரூன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago