தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’, கடந்த மாதம் 26-ம் தேதி வெளியானது. அடுத்து பான் இந்தியா படமான ‘குபேரா’ வில் நடித்து வருகிறார். சேகர் கம்முலா இயக்கும் இதில் அவர் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதற்கிடையே ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கும் தனுஷ், அடுத்து ஆனந்த் எல்.ராய் இயக்கும் ‘தேரே இஸ்க் மே’ (Tere Ishk Mein) என்ற இந்திப் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக, இந்தி நடிகை கீர்த்தி சனோன் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் கதையை கீர்த்தி சனோன் வாய்மொழியாக ஒப்புக் கொண்டதாகவும், ஒப்பந்தம் முடிந்தபின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
நடிகர் தனுஷ், ஆனந்த் எல்.ராய் இயக்கிய, ‘ராஞ்சனா’ மூலம் இந்தியில் அறிமுகமானார். அவர் இயக்கத்தில் ‘அட்ரங்கி ரே’ படத்திலும் நடித்திருந்தார். இது அவர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 3 வது படம் ஆகும்.
முக்கிய செய்திகள்
சினிமா
40 mins ago
சினிமா
51 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago