பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய்யுடன் ‘பீஸ்ட்’ படத்தில் தீவிரவாதியாக நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் நடித்திருந்தார். தெலுங்கிலும் நடித்து வருகிறார். இவர் தபீதா என்பவரைத் திருமணம் செய்திருந்தார். இவர்களுக்குப் பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்துப் பெற்றனர்.
பின்னர் தனது நீண்ட நாள் தோழியான தனுஜா என்ற மாடலுடன் கடந்த சில மாதங்களுக்கு முன் ஷைன் டாம் சாக்கோவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்தப் புகைப்படங்களை இருவரும் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். சமீபத்தில் அதை நீக்கினர். இதனால் பிரிந்துவிட்டதாகச் செய்தி வெளியானது. சமீபத்தில் அளித்த பேட்டியில் அதை உறுதிப் படுத்தியுள்ளார், ஷைன் டாம் சாக்கோ.
“இப்போது சிங்கிளாகத்தான் இருக்கிறேன். அதிகமாக அன்பு வைத்திருந்தாலும் அந்த காதலைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு உறவைப் பேணுவதற்கு ஒருவரை விரும்புவது மட்டும் போதாது. இருவருமே இந்தப் புரிதலுக்கு வந்தோம். தற்போது டேட்டிங் ஆப்-பை பயன்படுத்துகிறேன். அதில் இருப்பது நான் தான் என்பதை நம்ப மறுக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தனுஜா கூறும்போது, “அவரை நேசித்தது போல நான் யாரையும் நேசித்ததில்லை. சில விஷயங்களை வெளிப்படையாகப் பேச முடியாது. அதனால் இது இதுபற்றி பேச விரும்பவில்லை” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago