‘ஊட்டியில் படப்பிடிப்பு ஒளிப்பதிவாளர்களுக்கு சவால்’ - பிரசன்ன குமார்

By செய்திப்பிரிவு

தமிழில் ‘பிச்சைக்காரன்’ படம் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் பிரசன்ன குமார். தொடர்ந்து, இவன் தந்திரன், சிவப்பு மஞ்சள் பச்சை உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள அவர், ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ள ‘சட்னி சாம்பார்’ வெப் தொடருக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அவர் கூறும்போது, “வித்தியாசமான கதைகளில் பணியாற்ற வேண்டும் என்பது என் ஆசை. ‘சட்னி சாம்பார்’ வெப் தொடரின் கதை ஊட்டியில் நடக்கிறது. பொதுவாக ஊட்டி என்றால் ‘கிளைமேட்’ நன்றாக இருக்கும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால், 10 நிமிடத்துக்கு ஒரு முறை, மழை வெயில், குளிர் என மாறிக்கொண்டே இருப்பதால் படப்பிடிப்புக்கு அது சவாலானதாகவே இருக்கும்.

‘சட்னி சாம்பார்’ படப்பிடிப்பில் இதுபோன்ற பிரச்சினையை பலமுறை எதிர்கொண்டோம். இயக்குநர் ராதா மோகன், கொடுத்த சுதந்திரத்தால் சிறப்பாகக் கையாண்டோம். எனது படங்களில் தனித்துவம் தெரிய வேண்டும் என்று நினைப்பேன். என்றாலும் இயக்குநரின் பார்வை நிறைவேறியதா என்பதைத்தான் முதலில் பார்ப்பேன். அடுத்து ‘நூறு கோடி வானவில்’, ‘மெட்ராஸ்காரன்’, ‘கிரிமினல்’, ‘குருவிகாரன்’ படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE