‘அடக்குமுறையும் திணிப்பும்...’ - கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ ட்ரெய்லர் எப்படி? 

By செய்திப்பிரிவு

சென்னை: கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரகு தாத்தா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - “பொண்ணா அடக்கமா எல்லாம் இருக்க முடியாது” என தொடக்கத்திலேயே சீறுகிறார் கீர்த்தி சுரேஷ். மீண்டும் மீண்டும், ‘பொண்ணா அடக்கமா இரு’ என சொல்லும்போது கொந்தளிக்கிறார். யாருக்கும் கட்டுப்படாத, எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் வலிமையான கதாபாத்திரமாக கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

இடையில் இந்திக்கு எதிரான போராட்டங்களும், இந்தி பேப்பரை கிழித்தெறியும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. திணிப்புக்கும், அடக்குமுறைக்கும் எதிராக காமெடி டிராமாவாக படம் உருவாகியிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. இறுதியில் ‘ஏக் காவ்மே ஏக் இசான்’ என கீர்த்தி சுரேஷ் இந்தி கற்றுக்கொள்வதுடன் ட்ரெய்லர் நிறுவடைகிறது. படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ரகு தாத்தா: ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் நேரடியாக தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ள படம் ‘ரகு தாத்தா’. பெரும் வரவேற்பை பெற்ற ‘தி ஃபேமிலி மேன்’ வெப் தொடருக்கு கதை எழுதிய சுமன் குமார் எழுதி இயக்கியுள்ளார். இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒய் யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்