பிரசாந்தின் ‘அந்தகன்’ ரிலீஸ் தேதி மாற்றம்: ஆகஸ்ட் 9-ல் வெளியீடு!

By செய்திப்பிரிவு

சென்னை: பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி படம் வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு உள்ளிட்டோர் நடித்த படம் ‘அந்தாதூன்’. 2018-ல் வெளியான இப்படம் அந்த ஆண்டின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக மாறியது. ‘அந்தாதூன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன். படத்தை அவரது ஸ்டார் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார்.அவருடன் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நீண்ட காலமாக வெளியீட்டுக்கு காத்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை ஒருவழியாக படக்குழு அண்மையில் வெளியிட்டது. படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நாளில் விக்ரமின் ‘தங்கலான்’, அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 2’, கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. இந்நிலையில் தற்போது திடீரென படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்