யூடியூப் சேனல்களில் பலர் திரைத்துறையினர் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்பி வருவதாகத் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரபலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர் விஷ்ணு மஞ்சு, திரைத்துறையினர் பற்றி அவதூறு செய்திகளைப் பரப்பிய சுமார் 18 யூடியூப் சேனல்கள் மீது நடிகர் சங்கம் சார்பில் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு நடிகை மீனா உட்பட பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் நடிகர்கள் சங்கமும் இது போல விழித்துக் கொள்ள வேண்டும். பத்திரிகையாளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலர், பலரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மிகைப்படுத்தப்பட்ட பொய்யை வெளியிட்டு வருகின்றனர். தமிழக அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசுடன் இணைந்து இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் திரைத்துறையினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று உதயநிதியை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago