சென்னை: ரியான் ரெனால்ட்ஸ், ஹியூ ஜேக்மன் நடித்துள்ள ‘டெட்பூல் & வோல்வரின்’ ஹாலிவுட் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.3,650 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
மார்வெல் நிறுவன சூப்பர் ஹீரோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கேப்டன் அமெரிக்கா, அயன் மேன், தோர், ஹல்க் என்ற அந்தப் பட்டியலில் வோல்வரின் மற்றும் டெட்பூல் கதாபாத்திரத்துக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். வோல்வரின் மற்றும் டெட்பூல் பாத்திரங்களை இணைத்து உருவாகியுள்ள படம், ‘டெட்பூல் & வோல்வரின்’.
மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 34-வது படமான இது, ‘டெட்பூல்’ மற்றும் ‘டெட்பூல் 2’ படங்களின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஷான் லெவி இயக்கியுள்ள இதில், ஹியூ ஜேக்மேன் வோல்வரினாகவும் ரையான் ரெனால்ட்ஸ் டெட்பூலாகவும் நடித்துள்ளனர். கடந்த ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கிட்டத்தட்ட ரூ.2,000 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலகம் முழுவதும் ரூ.3,650 கோடியை வசூலித்துள்ளது. முந்தைய பாகங்களின் வசூலை இந்தப் படம் முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டும் படம் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. | விமர்சனத்தை வாசிக்க: Deadpool & Wolverine - திரை விமர்சனம்: வியத்தகு ‘டபுள்’ ட்ரீட் அனுபவம்!
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
41 mins ago
சினிமா
47 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago