சென்னை: பிரபாஸ் நடித்துள்ள ‘ராஜாசாப்’ திரைப்படம் வரும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான கிளிம்ஸ் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
‘கல்கி 2898 ஏடி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரைக்கு வர உள்ள படம் ‘ராஜாசாப்’. இப்படத்தை தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கியுள்ளார். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை பீபுள் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹாரர் ரொமான்டிக் ஜானரில் இப்படம் உருவாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கையில் பூங்கொத்துடன் பைக்கில் இருந்து இறங்கும் பிரபாஸ், பைக்கின் கண்ணாடியைப் பார்த்து தனக்கு தானே திருஷ்டி சுற்றிக்கொள்கிறார். தொடர்ந்து படம் 2025 ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வரும் என்ற அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. கிளிம்ஸ் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago