சிறுவன், சிங்கம், நேசம்... - பிரபு சாலமனின் ‘மாம்போ’ பட போஸ்டர் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநர் பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்துக்கு ‘மாம்போ’ (mambo) என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான முதல் தோற்றத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

‘மைனா’, ‘கும்கி’ படங்களின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரபு சாலமன் அடுத்ததாக ‘மாம்போ’ என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படம் உண்மையான சிங்கத்தை வைத்து எடுக்கப்பட்ட முதல் ஆசியப் படம் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் நடிகர் விஜயகுமாரின் பேரனும், வனிதா விஜயகுமார் - ஆகாஷ் தம்பதிகளின் மகனுமான விஜய் ஸ்ரீ ஹரி நாயகனாக நடிக்கிறார். யோகிபாபு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. சிங்கத்துக்கும் சிறுவனுக்கும் இடையிலான அன்பையும், பிணைப்பையும் பேசும் படமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் சிறுவன் ஒருவர் சிங்க குட்டியை தூக்கி முத்தமிடும் வகையில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபு சாலமன் கடைசியாக கோவை சரளாவை வைத்து ‘செம்பி’ படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்