விக்னேஷ் சிவன் - பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ முதல் தோற்றம் வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany) படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘துணிவு’ படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என லைகா அறிவித்து பின்னர் அது கைவிடப்பட்டது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க ஒப்பந்தமானார். இது தொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. இந்தப் படத்துக்கு தொடக்கத்தில் ‘எல்ஐசி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்று தலைப்பிடப்பட்டது. பின்னர் டைட்டில் தொடர்பாக எழுந்த பிரச்சினையின் காரணமாக ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என தலைப்பு மாற்றப்பட்டது. இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ’மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்தப் படம் காதல் மற்றும் பிரேக் அப் குறித்து பேசும் என்பதை போஸ்டர் உணர்த்துகிறது. ‘பிரேக் அப் க்ளைம் பெனால்டி’ என போஸ்டரில் உள்ள கட்டிடத்தில் எழுதப்பட்டுள்ளது இதனை உறுதி செய்கிறது. தொலைபேசியை தொடுவது போன்ற பிரதீப் ரங்கநாதனின் தோற்றம் கவனம் பெறுகிறது. சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தவிர்த்து விக்னேஷ் இயக்கிய மற்ற படங்கள் அனைத்தும் காதலை மையமாக கொண்டு உருவானது. அந்த வகையில் இந்தப் படமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்