கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி, ‘அவனே ஸ்ரீமன் நாராயணா', ‘777 சார்லி’ படங்களின் மூலம் தமிழுக்கும் வந்தார். இவர் தயாரித்த ‘பேச்சிலர் பார்ட்டி’ என்ற கன்னடப் படம் வரவேற்பைப் பெற்றது.
அதில் ‘நியாய எல்லி இதே’ , ‘காலிமாத்து’ ஆகிய படங்களில் இருந்து பாடல்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. இந்தப் பாடல்களைப் பயன்படுத்துவதற்காக, அதன் உரிமையை வைத்துள்ள எம்ஆர்டி மியூசிக் என்ற நிறுவனத்திடம் ரக்ஷித் ஷெட்டி பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுமுக முடிவு ஏற்படவில்லை.
இருந்தும் அனுமதியின்றி அந்த பாடல்களை ‘பேச்சிலர் பார்ட்டி’ படத்தில் பயன்படுத்தியதாக ரக்ஷித் ஷெட்டி மற்றும் அவரது தயாரிப்பு நிறுவனமான பரம்வா ஸ்டூடியோஸ் மீது எம்ஆர்டி மியூசிக் நிறுவனத்தின் பங்குதாரரான நவீன் குமார் பெங்களூரு போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பினர். இந்நிலையில் இந்த காப்புரிமை மீறல் வழக்கில் முன் ஜாமீன் கேட்டு பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றத்தில் ரக்ஷித் ஷெட்டி மனுதாக்கல் செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago