‘கல்கி 2898 ஏடி’: 2024-ல் வெளியான பிரபலமான படம்

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டு, இதுவரை வெளியான படங்களில் ‘கல்கி 2898 ஏடி’ படம் மிகவும் பிரபலமான இந்திய படங்களின் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது.

இணைய திரைப்பட தரவு தளமான ஐ.எம்.டி.பி (IMDb), பிரபலமான இந்திய திரைப்படங்களின் பட்டியலை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டும் அதே போன்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. 2024-ல் இதுவரை வெளியான படங்களில் மிகவும் பிரபலமான திரைப்படமாக ‘கல்கி 2898 ஏடி’ முதலிடத்தைப் பிடித்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கிய இந்தப்படத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதை அடுத்து ‘மஞ்சும்மள் பாய்ஸ்’ இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மைச் சம்பவத்தை வைத்து உருவான இந்த மலையாளப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்டபிற மொழிகளிலும் வசூல் அள்ளியது. அத்தடுத்த இடங்களில் ஃபைட்டர், ஹனு-மன், சைத்தான், லபாதா லேடீஸ் படங்கள் உள்ளன.

அதிகம் எதிர்பார்க்கும் படங்களின் பட்டியலில் ‘புஷ்பா 2’, ‘தேவாரா- பார்ட் 1’, ‘தி கோட்’, ‘கங்குவா’, சிங்கம் எகைன் படங்கள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்