சபரி புரொடக்ஷன்ஸ் சார்பில் மல்லையன் தயாரிக்கும் படம், ‘இஎம்ஐ - மாதத் தவணை’. எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ளார் சதாசிவம் சின்னராஜ். நாயகியாக சாய் தான்யா நடித்துள்ளார். பேரரசு, பிளாக் பாண்டி, ஆதவன், ஓ.ஏ.கே சுந்தர், மனோகர் நடித்துள்ளனர். பிரான்சிஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஸ்ரீநாத் பிச்சை இசையமைத்துள்ளார். பாடல்களை பேரரசு, விவேக் எழுதியுள்ளனர்.
படம் பற்றி சதாசிவம் சின்னராஜ் கூறும்போது, “இப்போது பெரும்பாலானவர்கள் இஎம்ஐ-யில்தான் பொருட்களை வாங்குகிறார்கள். ஒரு மொபைல் வாங்க வேண்டும் என்றால் கூட முழு பணம் கொடுத்து வாங்குவதில்லை. இஎம்ஐ-தான். இதுபோல லோன் எடுத்துவிட்டு தவணை கட்டவில்லை என்றால் கிடைக்கும் டார்ச்சர் அதிகம். இந்தப் படத்தின் நாயகன் காதலுக்காக கார், பைக் என்று கடனில் வாங்குகிறார்.
திடீர் என்று வேலை போய் விடுகிறது. இஎம்ஐ கட்ட முடியாமல் மாட்டிக்கொள்கிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பது கதை. காமெடி, சென்டிமென்ட் கலந்து படத்தை உருவாக்கி இருக்கிறோம். தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் பற்றி கிளைமாக்ஸில் சொல்லி இருக்கிறோம். அது நல்ல மெசேஜாக இருக்கும்” என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago