வாஷிங்டன்: 2024 அமெரிக்க அதிபர் தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலகுவதாக வெளியிட்ட அறிவிப்புக்கு நடிகர் ஜார்ஜ் க்ளூனி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் தனது ஆதரவை கமலா ஹாரிஸுக்கு வழங்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய ஜார்ஜ் க்ளூனி, “உண்மையான தலைமைப் பண்பு என்றால் என்னவென்று ஜோ பைடன் காட்டியுள்ளார். அவர் மீண்டும் ஒருமுறை ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளார். கமலா ஹாரிஸின் வரலாற்றுத் தேடலுக்கு ஆதரவளிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலம் குறித்து நாங்கள் அனைவரும் மிகவும் பயந்து, ஒவ்வொரு எச்சரிக்கை அறிகுறியையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
எனக்கு ஜோ பைடனை பிடிக்கும். ஒரு செனட்டராகவும், ஒரு துணை அதிபராகவும், அதிபராகவும், என் நண்பராகவும். நான் அவரை நம்புகிறேன்” இவ்வாறு ஜார்ஜ் க்ளூனி தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக நடிகர் ஜார்ஜ் க்ளூனி பிரச்சாரம் செய்து நிதி திரட்டியதில் 28 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
» “பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும்” - பட்ஜெட் குறித்து எஸ்பிஐ தலைவர் பாராட்டு
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் ஜனநாயகக் கட்சிக்கும் குடியரசு கட்சிக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவுகிறது. குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு ட்ரம்ப் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பிரச்சாரம் தொடங்கி நடந்துகொண்டிருக்கும் வேளையில் இறுதிகட்டத்தில் போட்டியிலிருந்து விலகுவதாக ஜனநாயகக் கட்சி பைடன் அறிவித்துள்ளார். மேலும், துணை அதிபர் கமலா ஹாரிஸை ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago