சென்னை: நயன்தாரா - கவின் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நயன்தாரா நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு ‘அன்னபூரணி’ திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிப்பில் இந்த ஆண்டு இதுவரை எந்தப் படமும் வெளியாகவில்லை. ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி’, ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ ஆகிய படங்கள் அவரது லைன்அப்பில் உள்ளன. இந்நிலையில், அவர் அடுத்து கவினுடன் இணைந்து நடிக்கிறார். கவினை பொறுத்தவரை அவரது நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஸ்டார்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தச் சூழலில் நயன்தாரா - கவின் இணையும் புதிய படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியவரும், பாடலாசிரியருமான விஷ்ணு இடவன் இப்படத்தை இயக்குகிறார். இது தொடர்பான அறிவிப்பில் நயன்தாராவும், கவினும் இணைந்து நின்று கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. கவின் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கும் ‘ப்ளடி பெக்கர்’ (Bloody Beggar) படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago