சென்னை: “கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படம் நன்றாக உள்ளது. தற்போது ‘வேட்டையன்’ படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இதையடுத்து சென்னை திரும்பிய அவரிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள், ‘கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படம் எப்படி உள்ளது?’ என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “இந்தியன் 2 படத்தைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது” என்றார். தொடர்ந்து ‘வேட்டையன்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என கேட்டதற்கு, “வேட்டையன் படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் முடிவாகவில்லை. படத்தின் டப்பிங் பணிகள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது” என்றார்.
முன்னதாக, ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேதி குறிப்பிடப்படவில்லை. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago