சிம்புவின் ‘வானம்’ படத்தில் அவர் ஜோடியாக நடித்தவர் ஜாஸ்மின் பஸின். சித்தார்த்தின் ‘ஜில் ஜங் ஜக்’ படத்திலும் நடித்த இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் நடித்துள்ளார்.
இப்போது இந்தி சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இவருக்கு திடீரென கருவிழி பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி சென்றிருந்தேன். ஒரு நிகழ்ச்சிக்கு முன் கண்களில் லென்ஸ் மாட்டினேன். அதில் என்ன பிரச்சினையோ தெரிய வில்லை. திடீரென கண்கள் வலிக்கத் தொடங்கின. இருந்தும் கண்ணாடி அணிந்துகொண்டு வேதனையுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.
» ரூ.3 கோடி மோசடி: மார்டின் கிராபிக்ஸ் டிசைனர் கைது
» பாரிஸ் ஒலிம்பிக்: குத்துச்சண்டையில் பதக்கத்தின் நிறத்தை மாற்றும் முனைப்பில் லோவ்லினா
பின்னர் மருத்துவமனை சென்றேன். பரிசோதித்த மருத்துவர், கருவிழிகள் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இன்னும் வலி அதிகமாக இருக்கிறது. சரியாக தூங்க கூட முடியவில்லை. இன்னும் நான்கு நாட்களில் சரியாகும் என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்’ என ஜாஸ்மின் பஸின் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
32 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago