நடிகர் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் கதை, திரைக்கதையில் உருவாகும் பான் இந்தியா படம், ‘மார்டின்’. இதில் கன்னட நடிகரும் அர்ஜுனின் மருமகனுமான துருவா சார்ஜா ஹீரோவாக நடிக்கிறார்.
வைபவி சாண்டில்யா நாயகியாக நடிக்கிறார். மாளவிகா, சாது கோகிலா, அச்யுத்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.பி.அர்ஜுன் இயக்கும் பிரம்மாண்ட ஆக்ஷன் படமான இதில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளன.
இந்தப் பணிகளுக்காக, பெங்களூரு மகாதேவ் பூரில் நிறுவனம் நடத்திய சத்யா ரெட்டி என்பவர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதற்காக அவருக்கு ரூ.3.20 கோடியை தயாரிப்பாளர் உதய் மேத்தா வழங்கினார். ஆனால், கிராபிக்ஸ் பணிகளை முடிக்காமல் ஏமாற்றி விட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பெங்களூரு பசவேஷ்வர்நகர் போலீஸ் ஸ்டேஷனில் உதய் மேத்தா புகார் அளித்தார். இதையறிந்த சத்யா ரெட்டி தலைமறைவானார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்த சத்யா ரெட்டியை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago