சென்னை: நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் முதல் பாடலான ‘ஃபையர் சாங்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ‘நாட்டு நாட்டு’ பாடலின் நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளார்.
சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
» நானி vs எஸ்.ஜே.சூர்யா - ‘சரிபோதா சனிவாரம்’ கிளிம்ஸ் எப்படி?
» ஆச்சர்யங்களின் அணிவகுப்பு... - ‘டெட்பூல் & வோல்வரின்’ புதிய ட்ரெய்லர் எப்படி?
இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிளான ‘பையர் சாங்’ வரும் ஜூலை 23-ம் தேதி சூர்யாவின் 43-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்று ஆஸ்கர் விருது வரை சென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago