ஆச்சர்யங்களின் அணிவகுப்பு... - ‘டெட்பூல் & வோல்வரின்’ புதிய ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

வாஷிங்டன்: வரும் ஜூலை 12 அன்று ‘டெட்பூல் & வோல்வரின்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதன் புதிய ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மார்வெல் நிறுவன சூப்பர் ஹீரோக்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கேப்டன் அமெரிக்கா, அயர்ன்மேன், தோர், ஹல்க் என்ற அந்தப் பட்டியலில் வோல்வரின் மற்றும் டெட்பூல் கதாபாத்திரத்துக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். வோல்வரின் மற்றும் டெட்பூல் பாத்திரங்களை இணைத்து உருவாகியுள்ள படம், ‘டெட்பூல் & வோல்வரின்’.

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் 34-வது படமான இது, ‘டெட்பூல்’ மற்றும் ‘டெட்பூல் 2’ படங்களின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. ஷான் லெவி இயக்கியுள்ள இதில், ஹியூ ஜேக்மேன் வோல்வரினாகவும் ரையான் ரெனால்ட்ஸ் டெட்பூலாகவும் நடித்துள்ளனர். ஜூலை 26 திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ரிலீஸுக்கு முந்தைய இறுதி ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - முந்தைய ட்ரெய்லர்களை காட்டிலும் இதில் மார்வெல் ரசிகர்களுக்கான ஏராளமான ஆச்சர்யங்களை வைத்துள்ளது படக்குழு. குறிப்பாக முந்தைய ட்ரெய்லர் மற்றும் டீசர்கள் நகைச்சுவை அம்சங்கள் அதிகமாக இருந்த நிலையில், இந்த ட்ரெய்லர் பெரும்பாலும் சீரியசாகவே செல்கிறது. இதில் வோல்வரினின் பின்னணி, ‘லோகன்’ படத்தில் நடந்த சம்பவங்கள் காட்டப்படுகின்றன. குறிப்பாக, காமிக்ஸில் வரும் பெண் வோல்வரின் கதாபாத்திரமும், ‘லோகன்’ படத்தில் வந்த வோல்வரினின் மகளும் மார்வெல் ரசிகர்களுக்கான ஆச்சர்யங்கள். இப்படம் இந்தியாவில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகிறது. ‘டெட்பூல் & வோல்வரின்’ ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

59 mins ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

மேலும்