சென்னையில் கொரிய திரைப்பட விழா தொடக்கம்: மூன்று நாட்கள் நடக்கிறது

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் கொரிய திரைப்பட விழா நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவில் நான்கு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இந்தோ சினி அப்ரிசியேஷன் அறக்கட்டளை மற்றும் சென்னையில் உள்ள கொரிய குடியரசுக்கான இந்திய தூதரகம் இணைந்து மூன்று நாள் திரைப்பட விழாவை நடத்துகின்றன. இந்த திரைப்பட விழா சென்னையில் உள்ள தாகூர் திரைப்பட மையத்தில் நேற்று (ஜூலை 19) தொடங்கியது.

இந்த விழாவை கொரிய குடியரசின் தூதர் சாங் - நியுங் கிம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஜூலை 19 முதல் 21 வரை நடக்கும் இந்த விழாவில், நண்பகல் 12 மணியளவில் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

இதில், ’தி த்ரோன்’, ‘எ டாக்ஸி டிரைவர்’, ‘டன்னல்’, ‘ஹுவாய்: எ மான்ஸ்டர் பாய்’ உள்ளிட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. மேலும் இந்த விழாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE