தமிழில் ‘எல்லாம் அவன் செயல்’ உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பாமா. இவர், கடந்த 2020-ம் ஆண்டு அருண் என்ற தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு கவுரி என்ற மகள் இருக்கிறார். இவர் கடந்த மே மாதம் சமூக வலைதளப் பக்கத்தில் தனது மகளின் போட்டோவை வெளியிட்டு, ‘இனி நான் சிங்கிள் மதர்’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் அவர் கணவரை பிரிந்தது தெரியவந்தது. இந்நிலையில் இவர் வெளியிட்ட பதிவு சர்ச்சையானது.
அதில் , “பெண்களாகிய நமக்கு திருமணம் தேவையா? வேண்டாம், தங்கள் பணத்தைக் கொடுத்து எந்தப் பெண்ணும் திருமணம் செய்யக் கூடாது. உங்களை கைவிட்டுவிட்டால் என்னவாகும்? உங்கள் பணத்தைப் பறித்துக் கொண்டு தற்கொலைக்குத் தள்ளுவார்கள். உங்கள் வாழ்க்கைக்குள் வருபவர் எப்படி நடத்துவார் என்பது தெரியாமல் ஒரு பெண் திருமணம் செய்யக் கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார். இது சர்ச்சையானதால் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதில்,‘‘நான் கூறியது வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய வேண்டாம் என்றுதான். பெண்கள் யாரும் திருமணம் செய்யக்கூடாது எனக் கூறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago