மும்பை: அமர் கவுஷிக் இயக்கத்தில் ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், பங்கஜ் திரிபாதி நடித்துள்ள ‘ஸ்ட்ரீ 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர், பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர் நடித்து கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஸ்ட்ரீ’. ஹாரர் காமெடி பாணியில் உருவான இந்த படத்தை அமர் கவுஷிக் இயக்கியிருந்தார். இப்படம் விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘ஸ்ட்ரீ 2’ உருவாகியுள்ளது. அதே நடிகர்கள் பட்டாளம் நடிக்கும் இந்த படத்தை அமர் கவுஷிக்கே இயக்கியுள்ளார். வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - முதல் பாகத்தில் சந்தேரி கிராமத்தை ஆட்டிப் படைத்த ‘ஸ்ட்ரீ’ பேய் ராஜ்குமார் ராவ் அண்ட் கோ-வால் விரட்டியடிக்கப்பட்ட பிறகு, இந்த பாகத்தில் தலையில்லாத ‘சர்கதே’ என்ற புதிய பேய் வருகிறது. அதாவது முந்தைய பாகத்தில் பாலியல் தொழிலாளியை ‘ஸ்ட்ரீ’ பேயாக மாற்றியவரின் பேய் என்று ட்ரெய்லரில் சொல்லப்படுகிறது. இந்த புதிய பேயை ராஜ்குமார் ராவ், பங்கஜ் திரிபாதி கூட்டணி எப்படி விரட்டுகிறது என்பதே இந்த படத்தின் கதை என்பதை ட்ரெய்லரின் வழியே யூகிக்க முடிகிறது.
போன பாகத்தில் ஒரு மர்மப் பெண்ணாக வந்த ஷ்ரத்தா கபூர் இதிலும் மீண்டும் வருகிறார். போன பாகத்தில் வந்த பேய் ஆண்களை கடத்தியது. இதில் வரும் ஆண் பேய் ஊரில் உள்ள பெண்களை கடத்திச் செல்கிறது. திகில் காட்சிகளின் இடையே ட்ரெய்லரில் வரும் வசனங்கள் பலவும் குபீர் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகின்றன. குறிப்பாக கபீர் சிங், அமீர்காந் அமிதாப் பச்சன், இன்ஃப்ளூயன்சர் பேய் தொடர்பாக வைக்கப்பட்ட வசனங்கள். முதல் பாகத்தைப் போலவே சுவாரஸ்யமான திரைக்கதை இதிலும் இடம்பெற்றிருந்தால் ரசிகர்களுக்கு திகில்+காமெடி என டபுள் ட்ரீட் உறுதி. ‘ஸ்ட்ரீ 2’ ட்ரெய்லர் வீடியோ:
» ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடிக்கும் ‘கடைசி உலகப் போர்’ - முதல் தோற்றம் வெளியீடு
» தனுஷ் பிறந்தநாளை ஒட்டி ஜூலை 26-ல் ‘புதுப்பேட்டை’ ரீரிலீஸ்!
முக்கிய செய்திகள்
சினிமா
21 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago