சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வாழை’ படத்தின் முதல் சிங்கிள் வியாழக்கிழமை வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘வாழை’. இதனை நவ்வி ஸ்டூடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன. படம் வெளியீட்டில் தாமதம் இருந்த நிலையில் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை தமிழகத்தில் ரெட்ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் ஜூலை 18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சில தினங்களில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என தெரிகிறது. படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. மாரி செல்வராஜ் தற்போது துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
» “வெறுப்பு பிரச்சாரமாக இதை மாற்ற வேண்டாம்” - ஆசிஃப் அலி வேண்டுகோள்
» எளிய மொழி நடை, ஈர்க்கும் இசை - பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ முதல் சிங்கிள் எப்படி?
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
34 mins ago
சினிமா
40 mins ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago