எளிய மொழி நடை, ஈர்க்கும் இசை - பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ முதல் சிங்கிள் எப்படி? 

By செய்திப்பிரிவு

சென்னை: பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் முதல் சிங்கிளான ‘மினிக்கி மினிக்கி’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

முதல் சிங்கிள் எப்படி? - ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்பாடலை சிந்துரி விஷால் பாடியுள்ளார். பாடல் வரிகளை உமா தேவி எழுதியுள்ளார். ‘மினிக்கி மினிக்கி’ என தொடங்கும் இப்பாடல் காதல் பாடலாக உருவாகியுள்ளது. கோரஸுடன் கூடிய பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. “கும்பல் கூடும் மேகம் மழைய பெய்யாதோ, கட்டி வைச்ச சோகம் கரைஞ்சு போகாதோ” போன்ற உமா தேவியின் வரிகள் கவனிக்க வைக்கின்றன. நாட்டுப்புறப் பாடலான இப்பாடலில் ‘மினிக்கி’, ‘சிலிப்பி’, ‘சோக்கா திரியுது’, போன்ற எளிய மொழி நடை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷின் ‘கத்தரி பூவழகி’ பாடலை நினைவூட்டுகிறது. ஒருவகையான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் இப்பாடலை நடன அசைவுகளுடன் பார்க்கும்போது காட்சிகள் ஈர்க்கின்றன.

தங்கலான்: இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ‘தங்கலான்’. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஞானவேல் ராஜா படத்தை தயாரித்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. பாடல் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்