சென்னை: நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்துக்கு ‘ஓர் மாம்பழ சீசனில்…’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷால் நடிப்பில் அண்மையில் ‘லால் சலாம்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஓர் மாம்பழ சீசனில்…’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ‘பேச்சுலர்’ படத்தின் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார். படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் அறிவிப்பு போஸ்டரில் வெட்டி வைக்கப்பட்ட மாம்பழமும், அதனருகில் எறும்பு ஒன்றும் உள்ளது. படத்தின் கதை என்ன? போஸ்டர் தரும் விளக்கமென்ன என்பது குறித்து ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இருப்பினும் படத்தின் தலைப்பு கவனம் பெற்றுள்ளது.
மேலும், படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்தோ, தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தோ தகவல் வெளியாகவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. விஷ்ணு விஷாலை பொறுத்தவரை அவரது நடிப்பில் அடுத்து ‘மோகன்தாஸ்’ படம் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
35 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago