சென்னை: தனுஷ் நடித்துள்ள ‘ராயன்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - ‘காட்டுலையே ஆபத்தான மிருகம் எது தெரியுமா?’ என செல்வராகவன் கேட்க, ‘சிங்கம் தான்’ என்கிறார் குட்டி தனுஷ். ‘ஆபத்தான மிருகம் ஓநாய். ஒத்தைக்கு ஒத்த நின்னா சிங்கம் ஓநாய அடிச்சிடும். ஆனா ஓநாய் தந்திரவாதி” என்ற செல்வராகவனின் வசனம் காட்சிகளுடன் பொருந்தி போகிறது.
வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். பிரகாஷ் ராஜும் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது. மொட்டை அடித்துக்கொண்ட தனுஷின் தோற்றமும், தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் மூன்று பேரும் சேர்ந்த நிற்கும் ப்ரேம் ஈர்க்கிறது. பின்னணி இசை கவனம் பெறுகிறது. அழுத்தமான ஆக்ஷன் கதைக்களத்தில் படம் உருவாகியிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. படம் 26-ம் தேதி திரைக்கு வருகிறது.
ராயன்: தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
» ஷாருக்கான் படத்தில் வில்லனாக அபிஷேக் பச்சன் - அமிதாப் பச்சன் வாழ்த்து
» போதைப் பொருள் வழக்கில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் சகோதரர் கைது
கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. படம் வரும் ஜூலை 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago