தெலுங்கில் வெளியான 'அர்ஜூன் ரெட்டி' மூலம் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. தமிழில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘100% காதல்’, மாதவன் நடித்த ‘சைலன்ஸ்’ படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது, 'மகாராஜ்' என்ற இந்திப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
'அர்ஜூன் ரெட்டி' படம் இந்தியில் ‘கபீர் சிங்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஷாகித் கபூர், கியாரா அத்வானி நடித்திருந்தனர். ஆனால், கியாரா அத்வானிக்கு கிடைத்த புகழ், ஷாலினி பாண்டேவுக்கு கிடைக்கவில்லை. இதற்கு, உருவக் கேலிக்கு தான் ஆளானதுதான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
“அர்ஜூன் ரெட்டி படத்தில் நடிக்கும் போதும் பிறகும் உருவக் கேலிகளை எதிர்கொண்டேன். அப்போது நான் கொஞ்சம் அதிக எடை கொண்டிருந்தேன். உடல் ஆரோக்கியத்துடன் சம்மந்தப் பட்டதுதான், ஃபிட்னஸ். உடல் தோற்றத்துடன் சம்மந்தப்பட்டதல்ல. பிறகு தென்னிந்திய மொழி எனக்குத் தெரியவில்லை. ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள தொடர்ந்து முயற்சித்துக் கொண்டிருந்தேன். என் அப்பாவித்தனத்தை என் மானேஜர்கள் தவறாகப் பயன்படுத்தி சில படங்களில் நடிக்கச் சொல்லி என்னை ஏமாற்றினர். அந்த நேரத்தில் என் குடும்பத்தினர்தான் எனக்கு ஆதரவாக இருந்தனர்” என்றுதெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago