தமிழில் ஹீரோவாகும் சிவராஜ்குமார்

By செய்திப்பிரிவு

சென்னை: பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமிழில், ரஜினியின் ‘ஜெயிலர்’, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்திருந்தார். இப்போது அவர் தமிழில் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘ஜாவா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் வழங்கும் இந்தப் படத்தை செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். ரவி அரசு இயக்குகிறார். இவர், அதர்வா முரளி நடித்த ‘ஈட்டி’, ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘ஐங்கரன்' படங்களை இயக்கியவர்.

படம் பற்றி அவர் கூறும்போது, “இது ஆக்‌ஷன் படம். கதையில் ‘ஜாவா' பைக்கிற்கு முக்கிய பங்கு உண்டு என்பதால், இந்த தலைப்பை வைத்துள்ளோம். ஒரே நேரத்தில் தமிழ், கன்னடத்தில் படம் உருவாகிறது. செப்டம்பரில் படப்பிடிப்பு தொடங்கும். 'ஜாவா' தலைப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதற்கான கிளிம்ப்ஸ் காட்சியை அடுத்த வாரம் படமாக்க இருக்கிறோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்