‘வருஷமெல்லாம் வசந்தம்’ பட இயக்குநர் ரவி ஷங்கர் தற்கொலை

By செய்திப்பிரிவு

சென்னை: ‘வருஷமெல்லாம் வசந்தம்’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவி சங்கர் சென்னையில் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.அவருக்கு வயது 63.

‘பாக்யா’ வார இதழில் வெளியான ‘குதிரை’ என்ற சிறுகதை மூலம் பத்திரிகையில் நுழைந்தவர் ரவி சங்கர். இயக்குநர்கள் பாக்யராஜ், விக்ரமன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தார். விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘சூர்யவம்சம்’ படத்தில் இடம்பெற்ற ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ பாடலை எழுதினார்.

கடந்த 2002-ம் ஆண்டு சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா, குணால் நடிப்பில் வெளியான படம் ‘வருஷமெல்லாம் வசந்தம்’. இந்தப் படத்தை இயக்கியவர் ரவி சங்கர். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘எங்கே அந்த வெண்ணிலா’ உள்ளிட்ட அனைத்துப் பாடல்களையும் ரவிஷங்கரே எழுதியிருந்தார்.

ரவிஷங்கர் திருமணம் செய்துகொள்ளவில்லை. சென்னை கே.கே.நகரில் உள்ள வீட்டில் தனியே வசிந்து வந்த அவர், தன் அறையில் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்