லாஸ் ஏஞ்சல்ஸ்: மார்வெல் நிறுவனத்தின் அடுத்த படமான ‘கேப்டன் அமெரிக்கா: ப்ரேவ் நியூ வேர்ல்ட்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
மார்வெல் காமிக்ஸின் பிரபலமான கதாபாத்திரமான கேப்டன் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக நடித்து வந்தவர் க்றிஸ் எவான்ஸ். ஸ்டீவ் ரோஜர்ஸ் என்ற கேரக்டரில் நடித்து வந்த அவருடைய ஒப்பந்தம் கடந்த 2019ல் முடிவடைந்த நிலையில், கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரம் தன்னுடைய பொறுப்பை தன் நண்பர் ஃபால்கன்/ஆண்டனி மெக்கீயிடம் ஒப்படைப்பதை போல முடித்திருந்தனர்.
அதன்பிறகு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘கேப்டன் அமெரிக்கா அண்ட் தி வின்ட சோல்ஜர்’ வெப் தொடரில் இந்த கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இதனை வைத்து கேப்டன் அமெரிக்கா: ப்ரேவ் நியூ வேர்ல்ட்’ என்ற படம் உருவாகியுள்ளது. இதன் டீசரை படக்குழு இன்று (ஜூலை 12) வெளியிட்டுள்ளது.
டீசர் எப்படி? - கேப்டன் அமெரிக்கா படங்களுக்கே உரிய சீரியஸான டார்க் ஆன ஸ்பை த்ரில்லர் பாணியிலான படம் தான் இதுவும் என்பதை டீசர் தொடங்கியதுமே தெரிந்து கொள்ள முடிகிறது. மார்வெல் காமிக்ஸின் முக்கிய கேரக்டரான தண்டர்போல்ட் ராஸ் ஆக பழம்பெரும் நடிகர் ஹாரிஸன் ஃபோர்டு வருகிறார். மிக சீரியசான அமெரிக்க அரசியல் பின்னணியில் நகரும் டீசரில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லை.
» உருவாகிறது நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ - அதிகாரபூர்வ அறிவிப்பு
» அம்பானி இல்லத் திருமண விழா: ஜான் சீனா, ரஜினி, யஷ், மகேஷ் பாபு உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு
கேப்டன் அமெரிக்காவின் ட்ரேட்மார்க் மூவ் ஆன தனது ஷீல்டை வீசி மீண்டும் பிடிப்பது இதிலும் வருகிறது. டீசரில் இறுதியில் மார்வெல் காமிக்ஸில் ஹல்க் கேரக்டருக்கு இணையான சக்திவாய்ந்த கதாபாத்திரமான ரெட் ஹல்க் வருகிறார். காமிக்ஸை பொறுத்தவரை ஹல்க்கை அழிப்பதற்காக தண்டர்போல்ட் ராஸ் ரெட் ஹல்க் ஆக மாறுவார். அதன்படி இதில் ஹாரிஸன் ஃபோர்டு ரெட் ஹல்க் வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ‘கேப்டன் அமெரிக்கா: ப்ரேவ் நியூ வேர்ல்ட்’ டீசர்:
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago