விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆக.2-ல் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கோலி சோடா’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவர்ந்தவர் விஜய் மில்டன். கடைசியாக 2018-ம் ஆண்டு இவரது இயக்கத்தில் ‘கோலி சோடா 2’ திரைப்படம் வெளியானது. அதன்பிறகு இவர் தமிழில் படம் இயக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவரது இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யராஜ், சரத்குமார், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு அச்சு ராஜாமணி - விஜய் ஆண்டனி இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன் 2’ படத்துக்குப் பிறகு வெளியான ‘கொலை’, ‘ரத்தம்’, ‘ரோமியோ’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெறாத நிலையில், ‘மழை பிடிக்காத மனிதன்’ எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்