“தென்னிந்திய நடிகர்கள் போதைப் பொருள் விளம்பரங்களில் நடிப்பதில்லை” - சித்தார்த் பெருமிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: தென்னிந்திர நடிகர்கள் யாரும் பான் மசாலா, மது, புகை உள்ளிட்ட விளம்பரங்களில் நடிப்பதில்லை என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், “ரஜினி, கமல் இருவருமே போதைப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்களில் நடிப்பதில்லை என பல வருடங்களுக்கு முன்பே முடிவெடுத்து இன்று வரை அதில் உறுதியாக நிற்கின்றனர். மது, புகை, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கான விளம்பரங்களை அவர்கள் எப்போதும் ஆதரித்ததில்லை.

அவர்கள் அதில் நடித்திருந்தால், மற்ற தென்னிந்திய நடிகர்களும் அதனை பின்பற்றியிருப்பார்கள். தென்னிந்திய நடிகர்கள் யரும் போதைப் பொருள் விளம்பரங்களில் நடிப்பதில்லை. அதற்கு காரணம் ரஜினி, கமல் வகுத்து தந்த பாதை. எங்கள் துறையில் இதுபோன்ற இரு ஆளுமைகள் இருப்பது எங்களுக்கு பெருமை. காரணம் இந்த இருவரும் எங்களுக்கு பல வகைகளில் வழிகாட்டியாக இருக்கின்றனர்.

அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் ஒரு தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் அற்புதங்கள். அவர்கள் இருவரையுமே இயக்குநர் ஷங்கர் சரியான முறையில் பயன்படுத்தி திரைப்படங்கள் எடுத்துள்ளார்.” இவ்வாறு சித்தார்த் தெரிவித்தார்.

கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ஜூலை 12-ல் வெளியாக இருக்கிறது. ஷங்கர் இயக்கியுள்ள இதில் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தின் புரமோஷனில் படக்குழு ஈடுபட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

35 mins ago

சினிமா

52 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

மேலும்