சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - நிலம், அப்பகுதி மக்களின் உடை, தோற்றம், மொழி, கலை ஆக்கம் என பிரம்மாண்ட படைப்பாக படம் உருவாகியுள்ளதை மொத்த ட்ரெய்லரும் உணர்த்துகிறது. அதிலும் விக்ரமின் நடிப்பு அசரடிக்கிறது. அதேபோல பார்வதியின் தோற்றமும், மாளவிகா மோகனின் மிரட்டலும் கதாபாத்திரங்கள் அழுத்தமாக உருவாக்கப்பட்டுள்ளதை உணர்த்துகின்றன.
கிராஃபிக்ஸ் காட்சிகள் மட்டும் பிசிறடிக்கிறது. ஜி.வி.பிரகாஷின் பின்னணி ஈர்க்கிறது. “சாவுக்கு துணிந்தவனுக்கு மட்டும்தான் இங்க வாழ்க்கை” என விக்ரம் பேசும் வசனமும், தொடர்ந்து வரும் சண்டைக் காட்சிகளும் கவனம் பெறுகிறது. ட்ரெய்லரின் இறுதியில் வரும் பாடல் ரசிகர்களை கவரும் என தெரிகிறது. மொத்தத்தில் விஷுவல்ஸ் செம்ம மிரட்டலாக இருக்கிறது.
தங்கலான்: பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் ‘தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் இதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. கடைசியாக ஜூன் 20-ம்தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது. ஆகஸ்ட் 15-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் உறுதிப்படுத்தபடவில்லை. ட்ரெய்லர் வீடியோ:
» “ஆஸ்கர் வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் எனது சிறந்த படைப்பு அல்ல” - கீரவாணி பகிர்வு
» “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக சொல்ல முடியாது” - அமீர் கருத்து
முக்கிய செய்திகள்
சினிமா
54 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago