சென்னை: “பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கான என்னுடைய இசையை ஒப்பிடும்போது, ‘நாட்டு நாட்டு’ பாடல் என்னுடைய சிறந்த படைப்பு ல்ல” என இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், “தாமதமாகவோ, முன்பாகவோ எனக்கு ஒரு பாடலுக்காக உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால், அது என்னுடைய சிறந்த படைப்பு அல்ல. அதே சமயம் உங்களுக்கான அங்கீகாரம் ஏதோ ஒருவகையில் எங்கிருந்தாவது வந்து சேரும். ஆனால், அது தாமதமாகிவிட்டதாக நீங்கள் உணரலாம். உங்கள் வாழ்நாள் கடந்தாலும், தாமதமாகவோ, முன்னதாகவோ வர வேண்டும் என இருந்தால் கண்டிபாக அந்த அங்கீகாரம் உங்களை வந்து சேரும்.
‘பாகுபலி 1’ மற்றும் ‘பாகுலபி 2’ போன்ற படங்களுக்கான எனது இசையை ஒப்பிடும்போது ‘நாட்டு நாட்டு’ பாடல் என்னுடைய சிறந்த படைப்பு அல்ல” என தெரிவித்தார். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக இசையமைப்பாளர் கீரவாணிக்கு கடந்த ஆண்டு ஆஸ்கர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago