சென்னை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியானது ‘கிங் ஆஃப் கோதா’. எதிர்மறை விமர்சனங்களால் படம் தோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்து திரைக்கு வர உள்ள படம் ‘லக்கி பாஸ்கர்’. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இவரது இயக்கத்தில் முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
‘லக்கி பாஸ்கர்’ படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. 1980 களின் பிற்பகுதியில் 1990 களின் முற்பகுதி வரை ஒரு வங்கி காசாளரின் அசாதாரண வாழ்க்கையை விவரிக்கிறது இப்படம். மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago