பிரபாஸ் படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல தென்கொரிய நடிகர்? 

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் பிரபல தென்கொரிய நடிகர் மா டாங் சியோக் (Ma Dong-Seok) நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898’. இந்தப் படம், பான் இந்தியா முறையில் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இப்படம் உலகம் முழுவதும் ரூ.900 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இப்படத்துக்குப் பிறகு ‘அர்ஜுன் ரெட்டி’, ‘அனிமல்’ படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்கவுள்ளார். பெரும்பொருட்செலவில் இப்படத்தை டி சிரீஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக பிரபல தென்கொரிய நடிகர் மா டாங் சியோக் (Ma Dong-Seok) நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மா டாங் சியோக் தென்கொரியாவில் மட்டுமின்றி இந்தியாவிலும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர். கொரிய ஆக்‌ஷன் படங்களை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு மா டாங் சியோக் மிகவும் பரிச்சயம்.

அந்த வகையில் ‘ஸ்பிரிட்’ படத்தில் மா டாங் சியோக் வில்லனாக நடிக்க இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. எனினும் படக்குழு தரப்பில் இதுகுறித்து அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

34 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்