சிம்புதேவன் - யோகிபாபுவின் ‘போட்’ ஆக.2-ல் ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

சென்னை: சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள ‘போட்’ திரைப்படம் ஆகஸ்ட் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ படம் மூலம் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தவர் சிம்புதேவன். அவரின் ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ படம் வரவேற்பை பெற்றது. கடைசியாக 2015-ம் ஆண்டு விஜய்யை வைத்து ‘புலி’ படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து ‘கசட தபற’, ‘விக்டிம்’ போன்ற ஆந்தாலஜி படங்களில் பங்காற்றியவர் முழுநீள சினிமாவை எடுக்கவில்லை.

கிட்டத்த 7 வருடங்களுக்குப் பிறகு சிம்பு தேவன் இயக்கியுள்ள புதிய படம் ‘போட்’(BOAT). இந்தப் படத்தில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கவுரி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட காலக்கட்டத்தில் நடக்கும் இக்கதை உண்மை சம்பவத்தை தழுவி உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்