இறுக்கமான ஹீரோ, கவனம் ஈர்க்கும் மிஷ்கின்... - பாலாவின் ‘வணங்கான்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - வழக்கமான பாலா படங்களில் வரும் நாயகன் எப்படி இருப்பாரோ அதேபோல ஒரு நாயகனான அருண் விஜய். பெரும்பாலான கதாபாத்திரங்கள் சீரியஸாகவே வலம் வருகின்றன. கொலை ஒன்று நடக்க, அதைத் தொடர்ந்து காட்சிகள் நகர்கிறது. நீதிபதி கதாபாத்திரத்தில் மிஷ்கின் கவனம் ஈர்க்கிறார்.

ஒரு கட்டத்தில் வெறித்தனமிக்க நாயகன் எதிரிகளை அடித்து துவம்சம் செய்கிறார். வன்முறை அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. பின்னணியில் ஜி.வி.பிரகாஷின் இசை தனித்து தெரிகிறது. பெரிய அளவில் வசனங்கள் இல்லாமல் வேகமாக காட்சிகள் நகர்வதால், கதையை கணிக்க முடியவில்லை. ஆனால், பாதிக்கப்பட்ட நாயகன், அதற்கு பழிவாங்குவது போல தெரிகிறது. பாலாவின் வழக்கமான படத்தின் அனைத்து சாயல்களையும் ட்ரெய்லரில் காண முடிகிறது.

வணங்கான்: பாலா இயக்கத்தில், அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘வணங்கான்’. ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். ஒருகையில் பெரியார் சிலையும், மறு கையில் விநாயகரையும் அருண் விஜய் ஏந்தியிருக்கும் முதல் பார்வை ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

28 mins ago

சினிமா

39 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

மேலும்