பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஜான் லாண்டவ் (63). இவர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உலக அளவில் சூப்பர் ஹிட்டான டைட்டானிக் படத்தைத் தயாரித்தார்.
இந்தப் படத்துக்காக ஆஸ்கர் விருதை வென்றுள்ள இவர், அடுத்து அவதார் (2009), அவதார்: தி வே ஆஃப் வாட்டர் (2022) படங்களைத் தயாரித்தார். இதுவும் உலக அளவில்வெற்றி பெற்றது. இந்தப் படங்களைத் தவிர, கேம்பஸ் மேன், சோலாரிஸ், அலிடா: பேட்டல் ஏஞ்சல் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக மகன் ஜேமி தெரிவித்துள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த ஜான் லாண்டவுக்கு ஜூலி என்ற மனைவி, ஜேமி, ஜோடி என்ற மகன்கள் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
38 mins ago
சினிமா
46 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago