சென்னை: பார்த்திபன் இயக்கியுள்ள ‘டீன்ஸ்’ திரைப்படம் வரும் ஜூலை 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் தான் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படமும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு பார்த்திபன் நடித்து இயக்கிய திரைப்படம் 'இரவின் நிழல்'. சிங்கிள் ஷாட்டில் நான் லீனியராக உருவான இப்படத்தின் புது முயற்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்ற 'மாயவா' பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் இயக்கியுள்ள திரைப்படம் 'டீன்ஸ்' (Teenz).
குழந்தைகளை மையமாக கொண்ட இப்படம் சாகச த்ரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். காவ்மிக் ஆரி ஒளிப்பதிவு செய்துள்ளார். பயோஸ்கோப் ட்ரீம்ஸ், அகிரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகி உள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் பரவலாக கவனிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படம் வரும் ஜூலை 12-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதே நாளில் தான் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படமும் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. படத்தின் புரமோஷனுக்காக கமல் மும்பை சென்றுள்ளார். ஆனால், ‘டீன்ஸ்’படத்தின் ட்ரெய்லர் உள்ளிட்ட புரமோஷன் பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago