'கல்கி 2898 ஏடி' 2-ம் பாகம் 60 சதவீத படப்பிடிப்பு நிறைவு!

By செய்திப்பிரிவு

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘கல்கி 2898 ஏடி'. வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 27-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.550 கோடி வசூலித்துள்ளதாக
தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இதன் அடுத்த பாகம் குறித்து தயாரிப்பாளர் அஸ்வினி தத் தெரிவித்துள்ளார்.

“கல்கி 2898 ஏடி படத்தின் 2-ம் பாகம் அடுத்த வருடம் வெளியாகும். தேதி முடிவாகவில்லை. அது இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும். அந்த பாகத்தின் கதையில் கமல்ஹாசனுக்கு முக்கியத்துவம் இருக்கும். 60 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. முக்கியமான காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

மேலும்