சென்னை: பா.ரஞ்சித் தயாரிப்பில் குரு சோமசுந்தரம் நடித்துள்ள ‘பாட்டல் ராதா’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - மொத்தப் படமும் மதுவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் உணர்த்தும் வகையில் உருவாகியுள்ளதை டீசர் உணர்த்துகிறது. மதுப்பிரியரான குரு சோமசுந்தரத்தின் ஜாலியான நடிப்பும், மாறனின் டைமிங் காமெடியும் கவனம் பெறுகிறது. “இன்னொரு தடவ குடிச்ச தாலிய சுழட்டி கடாசிட்டு போய்டே இருப்பேன்” என்ற மனைவியாக வரும் சஞ்சனா கதாபாத்திரம் பேசும் வசனம் அழுதுவடியாமல் அழுத்தமாக எழுதப்பட்டிருப்பதாக தெரிகிறது.
காட்சிகளையும், ஒலியையும் மிக்சிங் செய்து வெட்டப்பட்டிருக்கும் டீசர் நல்ல முயற்சி. “குடிச்சு குடிச்சு என் குடும்ப நாசமாக போகுது, அந்த கவலை தான் சார்”, “ஊருபுறா டாஸ்மாக்க தொறந்து வைச்சுட்டு குடிக்கிறவன குத்தம் சொல்றது” போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.
பாட்டல் ராதா: பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் இந்த ஆண்டு ‘ப்ளூ ஸ்டார்’, ‘J.பேபி’ ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. அவரது தயாரிப்பில் அடுத்ததாக திரைக்கு வர உள்ள படம் ‘பாட்டல் ராதா’.
இப்படத்தை பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இதில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் படத்துக்கு இசையமைத்துள்ளார். ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். டீசர் வீடியோ:
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago