சென்னை: பிரசாந்த் நடித்துள்ள ‘அந்தகன்’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் எந்த தேதி என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
இந்தியில் பெரும் வரவேற்பு பெற்ற ‘அந்தாதூன்’ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் பிரசாந்தின் தந்தை தியாகராஜன். படத்தை அவரது ஸ்டார் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். அவருடன் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
» ‘கல்கி 2898 ஏடி’-ன் இரண்டாம் பாகத்தில்தான் எனக்கு வேலை: கமல்ஹாசன் விவரிப்பு
» பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ உலகம் முழுவதும் ரூ.191 கோடி வசூல்!
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் படம் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டு வந்தது. பண்டிகை நாட்களில் படத்தின் போஸ்டர் வாழ்த்துகளுடன் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. இந்நிலையில், தற்போது இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து பிரசாந்த் நடித்துள்ள ‘தி கோட்’ படம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago